நடிகர் அசோக் செல்வன் தனது வாழ்க்கையை செதுக்கியது அம்மாவும், அக்காவும் தான் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை காட் கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, “ஓமைகாட் கடவுளின் திரைப்படம் வெற்றியினால் தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க முடிந்தது. என் அம்மாவும், அக்காவும் தான் என் வாழ்க்கையை செதுக்கியவர்கள். அம்மா மீது அன்பு வைத்தால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம்.
ஓ மை காட் திரைப்படம் என் அக்காவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.எனது வெற்றிக்குக் காரணம் எனது அம்மாவும் அக்காவும் தான். பெண்கள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள மரியாதைக்கும் அவர்கள் காரணம்”என்று கூறினார்.