Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு…. காரணம் இவர்கள் தான்…. ஹெச்.ராஜா காட்டம்…!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது சிலிண்டர் விலையானது தொடர்ந்து உயர்த்தப்பட்டு ரூ.835 விற்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது முறையும் சிலிண்டர் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் “வெற்றிகொடி ஏந்திய தமிழகமே” என்ற பெயரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணமானவர்கள் பொருளாதார மேதையான மன்மோகன்சிங் மற்றும் எங்க ஊர் ப.சிதம்பரம் என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |