மழை கிளி குஞ்சுகளை வீட்டில் வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிளிகள் டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை குஞ்சுகள் பொரிக்கும். அவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் வளர்ப்பதும் தண்டனைக்குரிய செயல். இந்நிலையில் சென்னையில் பாதுகாக்கப்படவேண்டிய மலை கிளி குஞ்சுகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என வனத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சந்தைகளில் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் தலைமையில் சென்று அங்கு மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்தவர்களை கைது செய்தனர். மேலும் சந்தைகளிலும், ஆன்லைன் மூலமாக ஒரு ஜோடி 4,000 விதம் விற்கப்படுகின்றது. இதனால் வனத்துறையினர் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு அவர்களிடமிருந்து 53 குஞ்சுகளை பறிமுதல் செய்துள்ளனர்.