2021 வருடம் ஜனவரி வங்கி விடுமுறைக்கான முழுபட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 வருடம் வாரும் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக, ரிசர்வ் வங்கியானது சென்னை, ஐஸ்வால், கேங்டாக், இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய நகரங்களில் வங்கிக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள வங்கிகள் பொங்கலுக்காக ஜனவரி 15-17 முதல் செயல்படாது. மற்ற நாட்களைத் தவிர, குடியரசு தினத்திலும் வங்கிகள் மூடப்படும்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி ஜனவரி 2021க்கான விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இதோ,
ஜனவரி1 – புத்தாண்டு தினம்
ஜனவரி2 – புதிய ஆண்டு கொண்டாட்டம்
ஜனவரி3 – ஞாயிறு
ஜனவரி9 – இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி10 – வார விடுமுறை
ஜனவரி12 – சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்
ஜனவரி14– மகர சங்கராந்தி / பொங்கல் / மாகே சங்கராந்தி
ஜனவரி15 – திருவள்ளுவர் நாள் / மாக் பிஹு மற்றும் துசு பூஜை
ஜனவரி16 – உழவர் திருநாள்
ஜனவரி17 – ஞாயிறு
ஜனவரி20 – குரு கோவிந்த் சிங் ஜி பிறந்த நாள்
ஜனவரி21 – நான்காம் சனிக்கிழமை, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள்
ஜனவரி24 – ஞாயிறு
ஜனவரி25 – இமோயினு இரத்பா
ஜனவரி26 – குடியரசு தினம்
ஜனவரி31 – ஞாயிறு
இவைதவிர, திருவள்ளுவர் தினம், மாக் பிஹு மற்றும் டுசு பூஜை காரணமாக ஹைதராபாத்தில் ஜனவரி 15ம் தேதி வங்கிகள் மூடப்படும். மேலும் குரு கோவிந்த் சிங் ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகரில் ஜனவரி 20ஆம் தேதி வங்கிகள் மூடப்படும். இந்த விடுமுறை நாட்களில் வங்கிகளில் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.