முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும்.
மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்:
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
கற்றாழை – ஒரு டீஸ்பூன்
கற்றாழையில் இருக்கும் நுங்கு போன்ற ஜெல் எடுத்து நன்றாக கசக்கி மஞ்சள்தூள் சேர்த்து இரண்டையும் குழைத்து முகத்தில் தடவி உலர்ந்த பின் முகத்தை கழுவ வேண்டும்.
முல்தானி மட்டி:
முல்தானி மட்டி-2 ஸ்பூன்
எலுமிச்சை-தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறுடன் தண்ணீர் கலந்து அதில் முல்தானி மட்டியை சேர்த்து நன்றாக கலக்கி அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவேண்டும். முகப்பருக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கிராம்பு பேஸ்பேக்:
கிராம்பு-ஐந்து
பன்னீர்-தேவையான அளவு
கிராம்பை எடுத்து மைய அரைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் வேரோடு அகன்றுவிடும்.
பூண்டு, தேன் மாஸ்க்:
பூண்டு-ஆறு பற்கள்
தேன்-தேவையான அளவு
பூண்டு காரத்தன்மை கொண்டது. சருமத்தில் லேசான எரிச்சலைக் கொடுக்கும். முதலில் பூண்டை பயன்படுத்துவார்கள் பூண்டு பற்களை பன்னீரில் நனைத்து ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு இடித்து தேன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு- ஒன்று
கெட்டித் தயிர்-ஒரு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு தோலுடன் நீர் சேர்க்காமல் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தில் பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
தக்காளி
தக்காளி-1
எலுமிச்சை சாறு-ஒரு டீஸ்பூன்
தக்காளியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி உலர வைத்து மீண்டும் இரண்டு முறை இவ்வாறு செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் நல்ல பயன் கிடைக்கும். இதனை தினமும் இருமுறை செய்து வர வேண்டும்.
பின்குறிப்பு:
வரட்டு சருமம் கொண்டவர்கள் பால் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை பயன்படுத்தலாம். அனைத்து வகையான சருமத்தினரும் தேன் பயன்படுத்தலாம்.