தயிருடன் சேர்த்து இந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் விஷமாக மாறிவிடுமா என்பதை பார்க்கலாம்.
நாம் சில உணவுப் பொருட்களோடு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், நாம் சாப்பிடதும் அந்த உணவு விஷமாக மாறிவிடும். இதை நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு சொல்வதுண்டு. இவ்வகையில் தயிரில் அதிக அளவு புரதம் உள்ளது. இந்த தயிரை பழங்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடும் போது செரிமானத்தை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். அதற்கு காரணம் பழங்களில் உள்ள அமிலத்தன்மை ஆகும். பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் போன்றவைகளை சாப்பிடும்போது பழங்கள் எடுத்துக்கொள்வதை குறைக்க வேண்டும்.
ஏனெனில் இவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். அதிலும் இரவு நேரங்களில் சாப்பிடவே கூடாது. அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி போன்று எந்த ஒரு அசைவ உணவுகளை சாப்பிடும் போதும் தயிர் சாப்பிட கூடாது. அதிலும் மிக முக்கியமாக மீன், இறைச்சியுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண்குஷ்டம், ஒவ்வாமை போன்றவை ஏற்படும். தயிரை விட மோரை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் தயிருடன் மோரை ஒப்பிடும் போது கூடுதலான ஜீரண சக்தியை உடையது.