Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவற்றை நிறைவேற்ற வேண்டும்… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்… நிறைவேற்றாத வாக்குறுதிகள்…!!

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதிலும் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் புதுத்தெருவில் வைத்து அதிமுக நிர்வாகிகள் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறுவேற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கப்படும் என்றும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றும் கூறியிருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும், 5 பவுனுக்குட்பட்ட வாங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த நிலையில் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தங்கியுள்ளார். மேலும் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், வர்த்தக அணி செயலாளர் மதிவாணன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தக்கோரி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதே போல் திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |