ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணிகுண்டா பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான சுப்பம்மா. இவர் வயல்வெளிக்கு அதிகாலை சென்றுள்ளார். அப்போது திடீரென விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று கத்தியுள்ளார். ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.
பின்னர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்கு மதியம் 3 மணிக்கு சிலர் தோட்டத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து கிணற்றில் இருந்து ஏதோ சத்தம் வருவதாக எட்டி பார்த்து உள்ளனர். பின்னர் அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிலிருந்து கட்டில் மூலம் மூதாட்டியை மீட்டனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.