அந்தமான் தீவுகளில் வாழும் பூர்வ குடியினருகளுக்குள் கொரோனா வைரஸை பரப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தொடங்கிய இந்த கொடிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கு முக கவசம், தனிநபர் இடைவெளி, என அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தற்போது அந்தமான் தீவுகளில் சிலர் அத்துமீறி நுழைந்து, இந்த வைரஸை பரப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்தமான் தீவில் வசிக்கும் பூர்வகுடியினர் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த “Survival International” என்ற தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்தமானில் சட்டவிரோதமாக வேட்டையாட வருவோர் இந்த பூர்வகுடிகளிடம் கொரோனாவை பரப்பியதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அத்துமீறிச் சென்றதாக 8 மீனவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்போது 5 ஆயிரமாக இருந்த பூர்வகுடிகளின் எண்ணிக்கை தற்போது 50 ஆகக் குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.