Categories
தேசிய செய்திகள்

இந்த பொருள்களை தவிர….. எவனும் நுழைய கூடாது….. தமிழக அரசு அதிரடி….!!

அனைத்து அண்டை மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருள்கள் மட்டுமே தமிழகத்தில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனோ வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கொரோனோ வைரஸ் வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாகவே அதிகம் பரவுவதாக தகவல் ஒன்று வெளியாகியது.

இதையடுத்து தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான கர்நாடகா கேரளா உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கடும் கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சில முக்கிய அத்தியாவசிய பொருட்களான பால், சிலிண்டர், கேஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வண்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையான துக்க நிகழ்வு உள்ளிட்டவற்றில் பங்கேற்க உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதைத் தவிர மற்றவர்கள் மறு உத்தரவு வரும் வரை முற்றிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |