ரஜினி அரசியல் வராததற்கு இந்த இரு நடிகர்கள் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி 2017 வருடம் டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதையடுத்து இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். ஒரு வழியாக 2020 வருடம் டிசம்பர் இறுதியில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக முடிவெடுத்தார். ஹைதராபாத் ஷூட்டிங்கில் அப்போது படக்குழுவினருக்கு கட்சி உறுதியானது. இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.
இதையடுத்து “என்னை நம்பி என் கூட வந்தவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. எனவே நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னொரு தகவலும் அடிபடுகிறது. என்னவென்றால் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினி ஹைதராபாத் சென்றபோது இந்த முடிவில் மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த திடீர் மாற்றத்திற்கு இரண்டு நடிகர்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இருவருமே ரஜினியின் மிக நெருக்கமான நண்பர்கள். அதில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி, மற்றொரு நடிகர் மோகன்பாபு. இம்முறை ஐதராபாத் சென்ற ரஜினி இருவரையும் சந்தித்து அரசியல் முடிவு குறித்து கலந்தாலோசித்துள்ளார். அப்போது இருவரும் “அரசியலில் பலவித மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கும். எதையும் நேரடியாக பேசும் உங்களுக்கு இது சரிவராது” என்று கூறியுள்ளனர். அதிலும் சிரஞ்சீவி தான் கட்சி தொடங்கிய போது ஏற்பட்ட சிக்கல்களை அனுபவபூர்வமாக பகிர்ந்துள்ளார். இதனையடுத்து தான் ரஜினி முடிவில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு தரப்பிலிருந்தும் இதை உறுதிப்படுத்தும் விதமாக செய்திகள் வரவில்லை.