Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“இந்த ராசிக்காரர்கள்”… நிதானமாக பேசினால் வெற்றி… முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!!  இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும்.  கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும்.  வீடு கட்டும் முயற்சி கைகூடும். இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.  இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும்.

உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைய நாள்  மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். மாணவகண்மணிகள் கொஞ்சம் முயற்சியின் பேரிலே பாடங்களை படிப்பது ரொம்ப சிறப்பு.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.  அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள்.  உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல்கள் வந்துசேரும்.     அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இன்று முழு யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். எனவே கவனமாக பேசுவது சிறப்பு.

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அதேபோல செய்கின்ற காரியங்களில் ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று கூடுதல் கவனம் தான் உங்களை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும்.  இன்று பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளை மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தயவுசெய்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருங்கள். உங்களுக்கான  நல்ல பலன்கள் அனைத்துமே கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.  அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள் ஆக இருக்கும். பொருளாதாரத்தை நீங்கள் உயர்த்துவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.அதுமட்டுமில்லாமல் இன்று வீடு வாகனம் வாங்க கூடிய தனயோகம் இருக்கும். செல்வ யோகமும் இன்று கூடும். வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மனம் தேவையில்லாத விஷயத்திற்காக சங்கடப்படகூடும்.

எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மட்டும் நல்லது. வீண் பகை வராமலும், உடல் ஆரோக்கியம் கெடாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். வீண் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது நிதானம் இருக்கட்டும். தயவுசெய்து இன்று நீங்கள் யாரிடமும் கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும்.

இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எப்பொழுதுமே எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு வாரம் வாரம் பழகிக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை:  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் சுப செய்திகளை கொடுப்பார்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

வெளியூர் தகவல் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்துகொண்டு செல்லுங்கள்.

நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை  ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பகை விலகி பாசம் கூடும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் இருக்கும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மையை  கொடுக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம். இன்று முயற்சியின் பேரில் சில முக்கியமான பணிகள் நிறைவேறும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உங்களை நிழல் போல பின்தொடர்ந்த கடன் சுமை குறையும். இன்று வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது மட்டும் நல்லது. சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பும் உண்டாகும். காயங்களில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும்.

அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது மட்டும் நல்லது. கூடுமானவரை உங்கள் சிந்தனையை இன்று நீங்கள் ஒருநிலைப்படுத்துங்கள். மாணவ செல்வங்கள் கொஞ்சம் கல்வியில் முயற்சியின் பேரில் படியுங்கள். ஆசிரியர்கள் செல்வதை கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். சக மாணவவரிடம் எந்தவித பிரச்சினையும் வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுங்கள். போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுங்கள்.

எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பண தேவைகள் உண்டாகும். அதற்காக நீங்கள் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. அன்பாகவே இருப்பீர்கள். மனைவியிடம் அன்யோன்யமாகவே இருப்பீர்கள். இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள். படித்ததை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறப்புகள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். கடன் தொல்லை கொஞ்சம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

வேற்று மொழி பேசுவோரின் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று கூடுமானவரை நீங்கள் கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதே போல புதிய முயற்சிகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து தள்ளிப்போடுங்கள், பார்த்துக்கொள்ளலாம். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும். விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். விவாத பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களுமே வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக பேசுங்கள், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்து அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து அவரிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவர்களால் கொஞ்சம் செலவு கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. அதே போல தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலைக்கு உண்டாகும் புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் பார்த்துக் -கொள்ளலாம். பணவரவிற்கு இன்று எந்த குறையும் இல்லை.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதத்தை  அன்ன தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் ; 1 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம்

அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் உருவாகலாம். இன்று பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டு பயணம் ஏற்படும். லாபம் இன்று ஓரளவு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படலாம்.

இதனால் உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும்  தெய்வத்திற்காக இன்று சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று மாணவ செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். கல்வியில் ஆர்வம் இன்று அதிகமாகவே காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நீண்டநாள் நண்பரின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உடல்நலம் மாற்று மருத்துவத்தால் சீராக இருக்கும். இன்று மற்றவருடன் விரோதம் கௌரவ பங்கம் போன்றவை ஏற்படலாம். இடமாற்றம் கொஞ்சம் இருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகம் நேரம் படிக்க நேரம் எடுக்கவேண்டி இருக்கும். வீண் வாக்கு வாதங்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இதை மட்டும் நீங்கள் சரியாக செய்யுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது. பல நாள் ஆசை இன்று உங்களுக்கு நிறைவேறக் கூடிய சூழல் இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருக்கட்டும். அதேபோல நண்பரிடம் பேசும்பொழுது ரொம்ப எச்சரிக்கையாக பேசுங்கள். நிலுவைப்பணம் இன்று உங்களுக்கு வசூலாகும். உடல் நிலையைப் பொறுத்த வரை எந்தப் பிரச்சினையும் இல்லை, நல்லபடியாக இருக்கும்.

அதே போல முக்கியமான விஷயத்தை நீங்கள் உங்கள் வீட்டு பெரியோரிடம் கேட்டு செய்யுங்கள். அவரது  ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். காரியங்களில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். அடுத்தவருக்காக எந்த பொறுப்பையும் ஏற்காதீர்கள். அதேபோல பணத்திற்கு பொறுப்பேற்காதீர்கள். அதுநண்பனுக்கு பணம் வாங்கிக் கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது உறவினர்களுக்கு பணம் வாங்கிக் கொடுப்பதாக இருந்தாலும் சரி நீங்கள் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை  அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |