Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்…!!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைபுக் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய வரைபுக்  அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநில மொழியிலோ கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உயர் கல்வி முறையை முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்துவது உலகளாவிய பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ அனுமதி அளிப்பது ஆகியவை புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டால்,அடுத்த 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் 50 சதவீதமும் பள்ளி கல்வியில்  100 சதவீதமும் மொத்த மாணவர்கள் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் கல்வித்துறையில் அடுத்த பத்தாண்டுகளில் மத்திய அரசின் முதலீடு 20 சதவீதமாக இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை வெளியிட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு கலை சார்ந்த வேலை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |