தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோன்று திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் போன்ற இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அங்கு சமயம் சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உட்பட 2,760 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அவற்றில் விபத்து மற்றும் குடும்ப வழக்குகள் என 1,444 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரத்து 417 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.