Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் வாகன சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

தேர்தலை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 5 பேரூராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த குழுவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் அவ்வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |