Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க ரொம்ப நடக்கு…. அதிகாரிகளுக்கு அறிவுரை…. காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு….!!

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

வேலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

அப்போது அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிப் காவல்துறையினருக்கும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கும் அவர்  அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |