தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் வைத்து நிறுவன தினவிழா கொண்டாடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் வைத்து 17-ஆவது ஆண்டு நிறுவன தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கொடியை ஏற்றி வைத்து வீரர்களுக்கு இனிப்பு வழங்கி உரையாற்றியுள்ளார்.
இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் அதுல் கர்வால் மற்றும் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே உரையாற்றியுள்ளனர். அப்போது நாட்டின் பல பகுதிகளில் பேரிடர் காலங்களில் வீரர்கள் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருவது குறிப்பிட்டு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.