Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு ….!!

சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று ஸ்டாலின் கையுறை அணிந்து கொண்டு கொடி ஏற்றிய பின்னர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் உடனடியாக அங்கிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-யின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திரு. ஸ்டாலின் மட்டுமல்லாமல் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |