தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டு கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து காணப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் நாளை நிறைவு பெற்று பக்தர்களின் வேண்டுகோளின்படி தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு அறநிலையத்துறை ஆணையர் அனுமதி வழங்கியதாக கோவில் வட்டாரம் தெரிவித்து நாள் குறிப்பிடப்படவில்லை.
எனவே அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் தேவ பிரசன்னம் பார்க்க 9 கேரள தந்திரிகளை அழைத்து கோவில் நிர்வாகம் அழைத்து சீட்டில் எழுதி அம்மன் சன்னதியில் குலுக்கிப் போட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் தந்திரியே தேவ பிரசன்னம் பார்ப்பார் எனவும் அவர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே தீ விபத்து ஏற்பட்ட பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.