பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 12 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்க்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 65வது நாட்களை நெருங்கி உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சொர்க்கமா?..நரகமா?.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது.
கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்குக்காக வீட்டில் சிறு கூண்டு வடிவில் ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியாகிய 3வது புரோமோவில் எந்த விஷயங்களை மாற்றிக்கொண்டால் தங்களை போல சொர்க்கத்தை வந்து சேரமுடியும் என அறிவுரை கூற வேண்டும் என்று சொர்க்கத்தினருக்கு பிக்பாஸ் வலியுறுத்தினார்.
அப்போது தனலட்சுமி கோபத்தை தவிர்த்தால் கண்டிப்பாக சொர்க்கத்துக்கு வருவார் என அமுதவாணன் கூறுகிறார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த தனலட்சுமி “தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதை நான் குறைத்து இருக்கிறேன். இதற்கு மேல் நான் கோபப்படாமல் இருப்பதற்கு அமுதவாணனாகதான் இருக்க வேண்டும்” என்று கோபமாக கூறினார். தற்போது இந்த புரோமோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.