Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களிடம் நடிக்கிறாங்க… இந்துக்களின் பகைவர்கள்… இந்துக்களே புரிஞ்சுக்கோங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆர்எஸ்எஸ் உடைய தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என்று அவர்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் வெளிப்படையாக சபதம் எடுத்து வருகிறார்கள். ஏனா அவங்க வந்து காந்தியை வந்து தேசத்தந்தையா ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது ஏற்றுகிற தேசிய கொடியை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நாம் இப்போது அழைக்கிற இந்தியா என்கிற பெயரை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை.

மதசார்பின்மை என்ற கருத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. அதனால் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர்கள் முழுமையாக மதிக்கக் கூடியவர்கள் இல்லை என விமர்சித்தார். இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-னுடைய பண்பு நலன்கள். இது ஊர் அறிந்த  உலகறிந்த உண்மை. ஆகவே இதுவரையில் அவர்கள் ஆர்எஸ்எஸ்-ன் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றவில்லை என்பது தான் நான் அறிந்த வரையில் உண்மை, ஏற்றினால் மகிழ்ச்சி.

52 வருஷமா ஏத்தாம இருந்திருக்காங்க. அதுக்கு பிறகு இந்த மாதிரி விமர்சனங்களுக்கு பிறகு ஏற்றியத தான் நாங்க ஏத்துனோம்னு சொல்றாங்க. அவங்களுக்கு பாடம் எடுக்குறதுக்கு நா ஒன்னும் பேராசிரியர் இல்லை. எங்க வலிய நாங்க வெளிப்படுத்துகிறோம் அவ்வளவுதான். நான் யாருக்கும் பாடம் எடுக்க விரும்பல. அவங்கள அம்பலப்படுத்துறோம். அவங்களுடைய உண்மை முகத்தை நாங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். அவர்கள் மக்களிடத்திலே குறிப்பாக அதுவும் இந்துக்கள் இடத்திலலே நடிக்கிறார்கள். இந்துக்களின் பகைவர்கள் சங்பரிவார்கள். அதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |