Categories
சினிமா தமிழ் சினிமா

”எனிமி” படத்தை ரிலீஸ் ஆகவிடாமல் தடுக்கிறார்கள்…. படத்தின் தயாரிப்பாளர் வேதனை பேச்சு….!!

எனிமி படத்தின் தயாரிப்பாளர் படம் ரிலீஸ் குறித்து ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ”எனிமி”. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதனிடையே, தீபாவளிக்கு மற்றொரு பிரம்மாண்ட படம் ரிலீஸாக இருப்பதால் படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் இந்த படம் ரிலீஸ் ஆவதை தடுக்கிறார்கள் என இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் கூறியுள்ளார்.

எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் - தயாரிப்பாளர் வேதனை

மேலும், இவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், படத்தை நவம்பர்4 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், ஆனால் பல இடங்களில் இப்போது நடக்கும் பிரச்சனை என்னவென்றால், ஒரு பெரிய படம் வர இருப்பதால் அந்த படத்தை தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஒரு தகவல். ஆனால், இது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தை திரையிட்டால் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து, நான் வெறும் 250 தியேட்டர்கள் தான் கேட்கிறேன். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய சிறிய ஷேர் கிடைத்துவிடும் என்று தயாரிப்பாளர் வினோத்குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |