திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளனர்.
இதையடுத்து தகராறு முற்றவே பசுபதியும் அவர்களது நண்பர்களையும் ஜனார்தன் கும்பல் அடிக்க முன்வந்தது. இதைத்தொடர்ந்து பசுபதியும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கத் தொடங்கினார். இதில் மல்லுக்கட்டிய இருதரப்பினரும் பின் மப்பேடு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இதை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரும் சட்டத்தை கையிலெடுத்து நடுத்தெருவில் சண்டையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரித்து வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.