Categories
அரசியல்

ஸ்டாலின் அவர்களே…! ”வெட்கமாக இல்லை”…. எதுக்கு தேர்தல் வைக்குறீங்க ? எடப்பாடி தாக்கு …!!

அதிமுக வேட்புமனுவை வேண்டுமென்றே நிராகரித்து விட்டனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தினார்.

கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த பகுதியில் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய வேட்பாளர்கள் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும், சில அதிகாரிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய கழக வேட்பாளர்கள் வேட்பு மனுவை நிராகரித்திருக்கின்றார்கள்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிடுகின்ற வேட்பாளரினுடைய மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இது வெட்கமாக இல்லை. அதுக்கு எதுக்கு தேர்தல் வைக்குறீங்க ? தேர்தல் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தோல்வியின் பயத்தின் காரணமாக கழக வேட்பாளர்களுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. நீதிமன்றம் இன்னிக்கி போய்விட்டோம், இதற்கு துணை போன அதிகாரிகள் சட்டரீதியாக சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

நீங்கள் அச்சுறுத்தியும், மிரட்டியோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டனை கூடத் தொட்டுப் பார்க்க முடியாது திரு ஸ்டாலின் அவர்களே…. வழக்குப் போட்டா பயந்து விடுவார்களா ? எத்தனை வழக்குகளை சந்தித்து தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இருக்கின்றது என எடப்பாடி பேசினார்.

Categories

Tech |