ஹன்சிகாவின் காலுக்கு கீழே கேமராவை வைத்து போட்டோ எடுத்ததாக பத்திரிக்கையாளர்களை கடுமையாக விளாசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பத்திரிக்கையாளர்களை விளாசியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.ராஜன் பேசியதாவது, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹன்சிகா பங்கேற்க வந்தார். ஆறு மணி நிகழ்ச்சிக்கு அவர் எட்டு முப்பது மணிக்கு வந்தார்.
ஹன்சிகா வந்ததுமே அவரை பத்து கேமரா மேன்கள் சுற்றி கொண்டார்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக போட்டோக்கள் எடுத்தார்கள். இப்படி இருந்தால் எப்படி அவர் மதிப்பார்? தயாரிப்பாளர் சென்றால் அவரையே ஒதுங்கி நிற்க சொல்கின்றார்கள். பத்திரிக்கை துறையில் ஆட்கள் அதிகமாகி விட்டதால் காலம் மாறி போச்சு என பத்திரிக்கையாளர்களை கடுமையாக சாடியிருக்கின்றார்.