ரீல் ஜோடியாக இருந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தற்போது ரியல் ஜோடிகளாக மாறியுள்ளார்கள்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தின் காரணமாக முடிவு பெற்றது. இந்த சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் சீரியல் முடிந்ததும் இருவரும் தங்களின் புகைப்படங்கள் மூலம் காதலை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா. விஷ்ணுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானார். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்து பின் ரியல் ஜோடிகள் ஆக மாறி வரும் வரிசையில் தற்போது சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருக்கின்றார்கள். இவர்கள் வெளியே போன புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
https://www.instagram.com/p/CjnVNwsPcvM/?utm_source=ig_embed&ig_rid=eebc3eed-a224-40ce-860a-c9f34a1d5b9c