பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் சம்பள பாகுபாடு குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னுடைய நிறத்தை வைத்து கருப்பு பூனை என்று கிண்டல் செய்தார்கள். அதன் பிறகு ஆண் நடிகர்களுக்கு மட்டும்தான் சம்பளம் அதிக அளவில் வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் வெறும் 10 சதவீதம் மட்டுமே நான் வாங்குகிறேன். படப்பிடிப்பில் கதாநாயகிகள் நீண்ட நேரம் காத்திருக்கணும். ஆனால் நடிகர்களுக்கு அப்படி கிடையாது. அவர்களின் நேரத்திற்கு சூட்டிங் எடுக்கப்படும். மேலும் ஹாலிவுட் சினிமாவிலும் இதே நிலைதான் தொடர்கிறது என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.