Categories
சினிமா தமிழ் சினிமா

“அது பெருசா இல்லன்னு நிராகரிக்கிறாங்க”…. இளம் நடிகைகளுக்கு மட்டும் தான் மவுசு….. நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம்….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் கபாலி மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மோனிகா மற்றும் ஓ மை டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் என்னுடைய வயது முதிர்வை எதிர்கொள்வதற்கு அதிக அளவில் போராடி வருகிறேன்.

என்னுடைய சக நடிகைகள் சிலரே அழகு மற்றும் வயது முதிர்வை எதிர்கொள்வதற்காக அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள் என்றார். அதன் பிறகு ராதிகாவை பலர் புறக்கணித்தது குறித்தும், அவருடன் சேர்ந்த சில நடிகைகளை கொண்டாடியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா அது உண்மைதான் என்றார். அதன்பிறகு என்னிடம் அது பெரிதாக இல்லை என்ற காரணத்தினால் என்னை புறக்கணித்தார்கள். அது பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் மக்கள் இளம் நடிகைகளை மட்டும்தான் அதிக அளவில் விரும்புகிறார்கள். இளமை மற்றும் இயல்பான தோற்றம் இருப்பவர்களை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. அழகான தோற்றம் என்பதுதான் இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் தேடப்படும் விஷயமாக சினிமாவில் இருக்கிறது. மேலும் இதற்காக நிறைய பெண்கள் போராடி வருகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ‌

Categories

Tech |