Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளையாரு பெருசா இருக்கு…. முடிவுக்கு வந்த திமுக, காங்கிரஸ்… நறுக்கென்று பேசிய சீமான் ..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்திக்கு, காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சிலை வைக்கின்றோம் என சொல்லி உள்ளார்கள். பாஜகவின் கொள்கையை காங்கிரசும் கையில் எடுக்கின்றதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர்,

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு. ஆனால் கொள்கை ஒன்றுதான். காங்கிரஸ் வந்து கதர் கட்டிய பாரதிய ஜனதா, இது வந்து காவி கட்டின காங்கிரஸ், இரண்டு கட்சியை நிறுத்தி ஏதாவது ஒரு இடத்தில் கொள்கை வேறுபாடு என்று சொல்ல சொல்லுங்கள்,  நான் ஏற்கிறேன்.

பாரதிய ஜனதா எல்லாரும் இந்துக்கள் என்று சத்தம் போட்டு சொல்கிறார்கள், காங்கிரஸ் வந்து நாங்கள் எல்லாரும் இந்து தான் என்று அமைதியாக சொல்வார்கள். அவர்கள் பாபர் மசூதி இடிப்பார்கள்,  இவர்கள் அதற்கு அனுமதிப்பார்கள், அவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள்,  காங்கிரஸ்காரர்கள் வாழ்த்து சொல்வார்கள்.

இதில்  ஏதாவது பொய் இருக்கிறதா? காங்கிரஸ், திமுக என்ன முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றால், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு நாதி கிடையாது, பிஜேபிக்கு ஒரு போதும் போடப்போவதில்லை. நமக்குதான் ஒட்டு போட்டாக வேண்டும், அவர்கள் நாதியற்றவர்கள் என்று கருதுகிறது.அதனால் இருக்கின்ற இந்துக்கள் ஓட்டை வாங்க வேண்டும், அதனால் ஸ்டாலின் 90% என் கட்சியில் இந்துதான் என்று பேச வேண்டியது வருகிறது. அது ஏன் வருகிறது ?

மதவாதம், பாசிசம், மதவாத சக்தியை எதிர்க்கிறோம், அதற்கு எதிரான முற்போக்கு கூட்டணி, இதெல்லாம் பேசுகின்ற நீங்கள் எங்கள் கட்சியின் 90 சதவீதம் இந்து என்று பேச வேண்டிய தேவை ஏன் வருகிறது?காங்கிரஸ் இந்துக்கள் வாக்கை குறி வைத்து நகர வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது என்றால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் வாக்கு வந்துவிட்டது, அது நமக்கு தான்.

ஆனால் மீதி இருக்கின்ற இந்துக்கள் வாக்கும் மொத்தமாக பிஜேபிக்கு குவிந்து விடக்கூடாது, அதை உடைக்க வேண்டும் என்று தான் இந்த நாடகம். இவ்வளவு காலம் பிள்ளையார் தெரியவில்லையா உங்களுக்கு ? பெரிய உருவமாக தான் இருந்தார். கண்ணுக்கு தெரிலையா ? என விமர்சித்தார்.

Categories

Tech |