Categories
அரசியல் மாநில செய்திகள்

இவுங்களுக்கு தேச பற்றுக்கு இல்ல… பண பற்று தான் இருக்கு… பாஜகவை சரமாரியாக தாக்கிய சீமான் ..!!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேசத்துக்கு இருக்கும் ஒரே பற்று தான், அது பணப்பற்று தான் வேற என்ன இருக்கு ? வரி வரி வரி நீங்க  வாழனும்… எதற்கு? வரி கட்டுறதுக்காவது நீங்க வாழ்ந்தாகணும். என்ன கொடுமை இது. நாட்டுக்குடிகளின் வரி தவிர வேறு ஏதாவது இந்த அரசுகளுக்கு வருமானம் இருக்குதுன்னு யாராவது சொல்லுங்க ?

என்ன இருக்கு ? செல்போன் இல்லாத  எதுவும் இல்ல. செல்போன் பண பரிவர்தனைனு சொல்லுறாங்க. அதுல தான் பணம் கட்டணும். அதுல தான் வங்கியில, அதுல தான் எல்லாமே.இது செல்போன் தயாரிக்கிற முதலாளிக்கா ? அதுல இருக்கிற சிம் கார்டு அத தயாரிக்கிற முதலாளிக்கானதா ? இல்ல நாட்டு மக்களுக்கானதா ? அத ஏன் நீங்க வைக்கல?பிஎஸ்என்எல் என்று ஒன்னு இருந்தது. அதை அது அரசு தானே பண்ணுச்சு.

அது நல்லா தானே செயல்பட்டுச்சு. மலைகள்ல, காடுகள்ல, வேளாண் நிலங்கள்ல வேலை செய்றவங்க வர, தொடர்பு இருந்துச்சுல்ல. அது ஏன் முதலாளிட்ட போச்சு. 5g அலைக்கற்றை தனியார் முதலாளிக்கி…  இப்பதான் 4ஜி அலைக்கற்றை அரசு கிட்ட வந்திருக்கு. பிஎஸ்என்எல் கிட்ட வந்து இருக்கு.

எதுக்கு மக்கள் போவான். 5g கிட்ட தான் போவான். அது முதலாளி கிட்ட போகுது. அத ஏன் நீங்க நடத்தல ? அரசு நடத்தல ? ஏன் நடத்தல ? எதுல வருமானம் வருமோ,  எது தவிர்க்க முடியாத ஒன்றோ,  எது அடிப்படையோ,  அது அரசிடம் தானே இருக்கணும் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |