Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகள்…. தனிக்குழு அமைத்து விட்டோம்…. ஆட்சியரின் அதிரடி செயல்….!!

கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்ய கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குழு ஓன்று அமைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு உயிரிழக்கும் நபர்களின் குழந்தைகள் பெற்றோர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த குழந்தைகளின் நலன் கருதி மாநில மற்றும் மத்திய அரசுகள் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு 5 லட்சம் ரூபாயும் மற்றும் மத்திய அரசு 10 லட்சம் ரூபாயையும் அவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. இதில் பட்டப் படிப்பு வரையிலான இலவச கல்வி என பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் குழு ஒன்று அமைத்து பெற்றோரை இழந்த குழந்தைகளை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவர்களிடம் சென்றுள்ளதா என இந்தக் குழு கண்காணிக்கும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்து தருவோம் என்று அவர் கூறியுள்ளார். அதன்பின் இந்த ஆய்வு குறித்த கூட்டம் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |