உளவுத்துறை மூலமாக இவர்களே பணத்தை வைத்து விட்டு தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் குற்றசாட்டியுள்ளார்.
ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் , நடைபெற இருக்கும் சட்டமன்ற மற்றும் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்த்தால் வேட்பாளர்கள் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து தேர்தல் அதிகாரியை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறார்கள். துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி பணம் எடுத்ததாக சொல்கிறார்கள். எல்லா இடத்திலும் வீடியோ ஆதாரங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கைப்பற்றப்பட்ட பணம் எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகின்றார்.
இந்த அரசை காப்பாற்றிக் கொள்ள இதுபோன்ற சதி திட்டங்களை நிச்சயம் தீட்டுவார்கள். இதை _யெல்லாம் தாண்டி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி அடையும். உளவுத்துறையை வைத்துக்கொண்டு மற்ற வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இவர்களே பணத்தை வைத்து விட்டு தேர்தல் அதிகாரியை எடுக்க வைத்து தேர்தலை நிறுத்த முயற்சி செய்வார்கள். குறிப்பாக எங்களுடைய கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இவர்கள் தெரியாமலேயே பணத்தை வைத்து விட்டு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வருமான வரித் துறையை அனுப்பி பணத்தை எடுக்கலாம் என்று தினகரன் குற்றம் சாட்டினார்.
மேலும் TTV.தினகரன் கூறுகையில் , தேர்தல் வெற்றிக்காக அனைத்து விதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ய மத்திய- மாநில ஆட்சியாளர்கள் தயாராகி இருக்கிறார்கள். தன்னிடம் இருக்கும் அரசு துறைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கின்றது. தங்க தமிழ்ச்செல்வனின் வாகனத்தில் சோதனை நடத்தினார்கள். அதுபோல நான் பிரசாரம் முடித்து விட்டு காஞ்சிபுரத்தில் நான் தங்கியிருந்த ஓட்டலில் இரவு நேரம் சோதனை செய்தார்கள்.எங்களுடைய வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் உளவுத்துறை மூலமாக பணம் வைத்து விட்டு அதனை எடுப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருப்பதாக தகவல் வருகிறது.