Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கர புத்திசாலின்னு சொன்னாங்க…! ஒண்ணுமே புரியாம இருக்காரு… ஆளுநரை ரவியை ரவுண்டு கட்டிய கனிமொழி…!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ?  ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல,  திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை.

நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல.  எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? எத்தனை பேர் தன்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் அந்த ஆன்லைன் ரம்மியில் இழந்து கொண்டிருக்கிறார்கள் ? உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம்.  இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ?

எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்,  சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் போய் எத்தனை விளக்கங்கள் கொடுத்தார்கள். இந்த கவர்னர் கொண்டுவந்து போடும்போது என்ன சொன்னாங்க ? அவர் இன்டெலிஜென்ஸ்ல இருந்தாரு. பயங்கர புத்திசாலி அது,  இதுன்னு எல்லாம் சொன்னாங்க.

கிட்டத்தட்ட எத்தனை தடவை போய் விளக்கம் சொல்லி இருக்காரு அமைச்சரனே தெரியல.  ஆனா அவருக்கு புரியல.  இத்தனை முறை விளக்கங்கள் சொல்லிய பிறகும்,  மேதாவி என்று சொல்லக்கூடிய அந்த கவர்னருக்கு புரியல. அதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் என்ன ? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |