Categories
அரசியல் மாநில செய்திகள்

உனக்கு எல்லாம் தேவையில்லை போடி என்று சொல்லுறாங்க : பரபரப்பை கிளப்பிய விசிக பெண் நிர்வாகி ..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், நம்முடைய தலைவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும். இந்த மணிவிழாவை நாங்கள் அவசர அவசரமாக எதற்காக ஆரம்பித்தோம் ? என்றால் வாழ்த்து சொல்ல வேண்டும்.

தலைவரை நம் தாய்க்குலம் வாழ்த்த  வேண்டும். ஏதோ ஒரு 60 கிராம் நகை குடுத்தா போதும்,  அதை நாங்க முன்னாடி பொறுப்பாளர்களே கொடுத்து விடலாம். அப்படி என்ற முறையில் தான் மிக அவசரப்பட்டு,  தலைவரிடம் மிக அவசரமாக தேதி வாங்கி இருந்தேன். அதனால் என்னுடைய நிர்வாகிகள் நிறைய பேரால் கொடுக்கவே முடியவில்லை, எப்படியும் கொடுத்து விடுவோம்.

காலையிலிருந்து என்னுடைய மாநில நிர்வாகிகள் மிக சிறப்பாக தலைவர் அவர்களை உள்வாங்கி, தலைவருடைய கருத்துக்களை உள்வாங்கி, சனாதனம் என்றால் என்ன ? ஏன் சனாதானத்தை தலைவர் எதிர்க்கிறார் ? எதற்காக எதிர்க்கிறார் ? எவ்வாறு எதிர்ப்பை காட்டுகிறார் ? என்பதை மிகத் தெளிவாக பேசினார்கள்.

இவர்கள் அனைவரையும் நம் தலைவர் முன்னிலையில் பேச வைக்க முடியவில்லை என்ற வருத்தம். ஏனென்றால் தலைவரின் நேரத்தை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் முடித்து விட்டோம். புரிதல் இல்லாமல் இல்லை, இங்கே இருக்கின்றவர்கள் அனைவரும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்,  எந்த கட்சியிலுமே இவ்வளவு புரிதலோடு பெண் அமைப்புகள் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னுடைய மாவட்ட செயலாளர்களை உனக்கு ஏன் டீ இதெல்லாம் வேலை. உனக்கு எல்லாம் தேவையில்லை போடி என்று சொல்லுறாங்க என வேதனையை தெரிவித்தார்.

Categories

Tech |