தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பயிர் போன சிம்பு சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றி விழாவின்போது நடிகை ராதிகா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சிம்புவுக்கு ஏராளமான திறமைகள் இருக்கிறது. அவருடைய திறமைக்கு இந்த வெற்றிகள் எல்லாம் எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது.
உடல் எடை அதிகரித்து சூட்டிங் கூட செல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா என்னை அழைத்து பேசினார்கள். அவர்கள் என்னிடம் சிம்புவை கண்டித்து மீண்டும் சூட்டிங் செல்லுமாறு அறிவுறுத்துமாறு கூறினார்கள் என்று கூறினார். மேலும் நடிகை ராதிகா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.