ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறையில் உள்ள 142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சிறை கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் ராமநாதபுரம் சிறையில் இருக்கும் கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இதற்கு சிறை கண்காணிப்பாளர் தவமணி முன்னிலை வகுத்துள்ளார்.
இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் எபினேசர் தலைமையில் மருத்துவ குழுவினர் நேற்று சிறைக்கு வந்து சிறை மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மேற்பார்வையில் 142 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறையில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என சிறை கண்காணிப்பாளர் தவமணி உறுதியளித்துள்ளார்.