Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்கணும்: வெடித்ததும் புது பிரச்சனை… அதிமுக கூட்டத்தில் காரசாரமாக ஆலோசனை…!

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான  விவாதமானது தொடங்கி இருக்கிறது.

இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள்,  அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை மீண்டும் இங்கு வரவிடக்கூடாது என்றும்,  புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் ஒரு தரப்பும் மாறி மாறி பேசுகிறீர்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு, அமுமுக டிடிவி தினகரன் தலைமையில் தனி கட்சியாக களம் கண்டது காரணம் எனவும் பேசப்பட்டுள்ளது.  அதிமுக முக்கியமாக இடங்களில் சொற்ப வாக்குகள் எண்ணிக்கையில் தான் தோல்வியடைந்துவிட்டது. அந்த இடங்களில் அமமுக வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருந்தால் கௌரவமான இடத்திற்கு வந்திருக்கலாம்.

திமுகவை தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்க வழி வகுத்திருக்க இயலாத ஒரு சூழலை ஏற்பட்டிருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள், அதிமுகவில் இருந்து பிரிந்து  சென்றவர்களை மீண்டும் அதிமுகவிற்கு வரவேண்டும் என்று ஒரு தரப்பினரும்,  அதேபோல அவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் சீனியர் என்ற அடிப்படையில் அவர்களுக்குத்தான் சீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

Categories

Tech |