லண்டனில் ஊரடங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது
லண்டன் பல்கலைக்கழக நிபுணர்களும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தொடங்கி ஜூன் மாதத்தின் இறுதி வரை நடந்த அந்த ஆய்வு கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக கை விட்டதாக தெரியப்படுத்தியுள்ளது. அதோடு 4,40,000பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இந்த தகவல் தங்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு அவர்கள் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியில் இருக்கும் போதும், வீட்டிற்கு தெரியாமல் புகைப்பிடிப்பவர்களும் ஊரடங்கால் வீட்டினுள்ளேயே இருப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை இதனை விட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது கவலை தரும் செய்தியாகவே உள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.