தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவருக்கு சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவின் போது மாமனிதன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தனக்கு கிடைத்த பரிசு தொகை முழுவதையும் நடிகர் விஜய் சேதுபதி அப்படியே விழா கமிட்டிக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, திரைப்படங்களை பார்த்துவிட்டு செல்லாமல் திரைப்படங்களின் மூலம் இயக்குனர்கள் சொல்ல வரும் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் ஆரோக்கியமான விவாதங்களில் மட்டும் ஈடுபடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு திரைப்படங்கள் உதவும். எந்த படத்தையும் விமர்சகர்கள் வாயிலாக புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். இப்போதெல்லாம் யூட்யூபில் கெட்டது பேசினால் மட்டும்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் படங்கள் சரியான முறையில் பார்க்கப்படுகிறதா என்பது கூட தெரியவில்லை. மேலும் இந்த விருதை பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.