Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க”…. அது என்னன்னு தெரியாம நானும் ஓகே சொல்லிட்டேன்…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி மேனன். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் கவர்ச்சியாக ஆடை அணிய மாட்டேன். இதனால் பலரும் என்னிடம் எதுவுமே காட்ட மாட்டிங்கிளா என்று கேட்பார்கள். அதோடு சில சமயங்களில் இணையதளங்களிலும் கூட மோசமான விமர்சனங்கள் வரும். என் அம்மா அதைப் பற்றி எல்லாம் ரொம்ப கவலைப்படுவார்.

ஆனால் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நான் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் என்னிடம் ஒருவர் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் சாப்பாடு மற்றும் சம்பளத்தை பற்றி தான் அப்படி சொல்கிறார் என்று நினைத்து நானும் ஓகே சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான் எனக்கு அட்ஜெஸ்ட் என்றால் என்ன என்று புரிந்தது. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காக முதலில் ஓகே சொல்லிவிட்டால் பிறகு கடைசி வரை அதுவே நிலைமையாகிவிடும். எனவே பாலியல் ரீதியாக அணுகி யாராவது வாய்ப்பு கொடுத்தால் அந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டு சினிமாவே வேண்டாம் என்று விலகி விடுவது தான் நல்லது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |