பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் உள்ள சாலையில் அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது நடிகர் நானி, லாரன்ஸ், விஷால் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் போன்றோர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார். இவர் தற்போது எதற்காக போராட்டம் நடத்தினார் என்ற காரணத்தை உருக்கமாக கூறியுள்ளார். நடிகை சகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ ரெட்டி தான் போராட்டம் நடத்தியதற்கான காரணம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையறை வரை அழைத்து சென்று விட்டு ஏமாற்றி விட்டார்கள்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் போட்டோ சூட் எடுப்பதற்கு வாருங்கள் என்று கூறுவார்கள். அங்கு சென்றாள் அந்த ஆடையை காட்டுங்கள் இந்த ஆடையை கழட்டுங்கள் உடம்பை அப்படி இப்படி காட்டுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் என்னை முழுமையாக பார்த்த பிறகு தற்போது போட்டோ சூட் வேண்டாம் என்று கூறிவிட்டு கிளம்ப சொல்லிவிடுவார்கள். அதன் பிறகு வாய்ப்பு கொடுப்பதாக கூறி என்னை அழைத்து செல்பவர்களும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுவார்கள்.
நான் அப்படி செய்த போது கூட எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட என்னை அவர்களுடைய படுக்கையறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். அவர்கள் எல்லோரும் பயன்படுத்திய என்னுடைய உடம்பை அவர்களுக்கு காட்டி நான் நியாயம் கேட்டேன். அவர்கள் என்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியது சரி. நான் செய்தது மட்டும் தவறா. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய ஆடைகளை கழட்டி விட்டு போராட்டம் நடத்தினேன் என்று கூறியுள்ளார்.