Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்…. பெயர் வைத்த நாளை இல்லை…. சீமான் 

பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்…. பெயர் வைத்த நாளை இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டபட்டது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், வெள்ளையர்கள் தங்கள் நிர்வாகத்திற்காக பல பகுதிகளை ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயரிட்டு உருவாக்கினார்கள். அதற்கு முன்பு என் மது முன்னோர்களால் ஆளப்பட்டு கொண்டிருந்த எனது தாய் நிலங்கள், ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்ற பிறகு மொழி வழியே தேசிய இனங்கள் தங்களுக்கான நிலப்பரப்பை பிடித்துக்கொள்வது  என்கின்ற முறையில் 1956இல் இன்றைய நாளான நவம்பர் 11 மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் படுகின்றன.

அதுவரை சென்னை மாகாணமாக இருந்த இந்த நிலப்பரப்பு என்னுடைய… தாய்மொழி தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பிரிந்து பிறந்த மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள், அந்த இன மக்கள் தங்கள் நிலப்பரப்பை தனித்தனியாக பிரிந்து முறையாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று பிரிந்து சென்றார்கள். எங்களுடைய நிலப்பரப்பு சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டு இருந்தது. அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பெருந்தமிழர் திருமகனார் சங்கரலிங்கம் அவர்கள் 76 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்தார். அன்றைய ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 1968இல் ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று இதற்குப் பெயரிட்டார்கள். அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்ற பெயர் இட்ட நாளை தான் கொண்டாட வேண்டும் என்று இங்கே திராவிட கட்சிகள் எல்லாம் சொல்லிக் கொண்டும், வலியுறுத்திக் கொண்டும் இருக்கின்றார்கள். பிள்ளை பிறந்த நாளைத்தான் உலகமெங்கும் கொண்டாடுவார்கள். அதற்கு பெயர் வைத்த நாளை யாரும் கொண்டாடுவதில்லை. இன்று தான் எமது மாநில எல்லை வகுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, எமக்கென்று ஒரு தேசம் நிலப்பரப்பு பிறந்தநாள் என சீமான் கூறினார்.

Categories

Tech |