பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம்.
ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.