Categories
தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டிக்கு வீசிய ஆதரவு அலைகள்…! தற்போது தேஜஸ்வி யாதவிற்கு வீசுகிறது…!!

பீஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய  ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆந்திராவில் ஜெகனை போல ஆதரவு அலைகளை உருவாக்கி வருவது நிதிஷ் பாஜக கூட்டணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக நிதிஷ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற கூடும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முதல்வர் வேட்பாளரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மாநிலம் முழுவதும் தொடர் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

மக்களிடம் தேஜஸ்விக்கு ஆதரவு பெருகி வருவதால் தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகளை தாண்டி இழுபறியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தேஜஸ்ரீ 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்துள்ளது அம்மாநில இளைஞரணி கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது நடைமுறை சாத்தியமற்றது என்றும் அரசு வேலைவாய்ப்பை பற்றி அறியாதவர்கள் தரும் முட்டாள்தனமான வாக்குறுதி என்று சாடியுள்ளார் நிதிஷ்.

ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானம் நித்தீஷ்க்கு எதிராக விமர்சனங்களை வைத்து பிரச்சாரம் செய்து வருவதால் நிதிஷ்  இருமுறை தாக்குதலை எதிர் கொண்டுள்ளார். தேஜஸ்ரீ செல்லும் இடங்களில் எல்லாம் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. இதனால் 2019ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் வீசியது போன்ற ஆதரவு அலைகள் பீகாரில் தேஜஸ்வி யாதவிற்கு ஏற்பட்டு உள்ளதாக அம்மாநில அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் மற்றும் யாதவர்களின் ஆதரவை பெற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு அவை வாக்குகளாக மாறினால் நித்திஷ் பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அது பாதிக்கும் என்கின்றனர். பீகாரின் முதல்வராக யார் வருவார் என சிஎஸ்டிஎஸ் லோகு நீதி நடத்திய கருத்து கணிப்பில் நித்தீஷ்க்கு  31 சதவீதம் பேரும், தேஜஸ்ரீ யாதவிற்கு 27 சதவிகிதம் பேரும், லாலுவிற்கு ஆதரவாக 3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ராஷ்டிரிய ஜனதா தளம் 30 சதவிகித ஆதரவைப் பெற்றுள்ளது. நித்திஷ் ஒரு சதவீத அளவில் மட்டுமே முன்னணியில் இருக்கிறார். தொடர்ந்து இரண்டாவது முறை மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் மீண்டும் முதல்வராக மக்கள் விரும்பவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. ஆனால் நிதிஷ் முதல்வராக பீகார் மக்கள் விரும்பவில்லை என்பது தேஜஸ்ரீ அளவிற்கு ஆதரவான வாக்குகளாக மாறுமா என்பதும் இப்போதைக்கு உள்ள பெரும் கேள்வியே. ஆனால் கருத்துக்கணிப்புகளை தாண்டி தேஜஸ்வி இன்  வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து வருவது பீகார் தேர்தலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |