பீகார் மாநிலத்தில் ஊழல் திளைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படும் காலம் தொலைவில் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பேசிய லோக் ஜன சக்தி கட்சி தலைவர் திரு சிராக் பஸ்வான் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வரும் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் பிஹார் மாநில அமைச்சர்கள் தேர்தலுக்கு பிறகு சிறை சொல்வார்கள் என்றார்.
பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரி நாளையுடன் முடிவு அடைய உள்ள நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணி தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28 நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.