தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எஸ்.வி. சேகர் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு உத்தரவாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திர காவல்துறையினரின் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.