தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவாக 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனவால் பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1341ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,256ஆக உயர்ந்துள்ளது.
12வயதுகுட்பட்ட 159 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளத்தில் 76 பெண்களும், 83 ஆண் குழந்தையும் அடங்கும். அதே போல 13 வயது முதல் 60 வயத்துக்குட்பட்டோரில் 2318 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 763 பெண்களும், 1554 ஆஆண்களும் அடங்குவார்கள். 60 வயதுக்கு மேற்பட்டோராக 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 81 பெண்கள், 199 பேர் ஆண்கள் ஆக உள்ளது.