தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகலே தேர்வு என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை வெளியீட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் புதிதாக 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 1821திலிருந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1885ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளது.