இந்தோனேசியா நாட்டில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்தோனேசியா பல்வேறு தீவுகூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கிறது. இந்நாடு பூமத்திய ரேகையை ஒட்டியுள்ளதால் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தீவு நகரான மலுகு டென்கரா பரட் மாவட்டத்தின் வடகிழக்கே 137 கிலோமீட்டர் தூரத்தில் 123 ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது.
இதில் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாகாண பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.