பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி திடீரெனகாணாமல் போய்விட்டார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ஓசூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தங்கள் மகளை கடத்திச் சென்றிருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓசூரை சேர்ந்த சசிகுமார் என்பவர் மாணவியை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.